அமெரிக்க நீதிமன்றம் ராஜ் ராஜரட்ணம் என்ற தமிழ் வர்த்தகருக்கு 11 ஆண்டுகால சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ளக வர்த்தகச் செயற்பாடுகளை மேற்கொண்டு மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இவருக்கு முதன் முதலாக மிக நீண்டகாலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்
ராஜரட்ணம் என்ற வர்த்தகருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 11 ஆண்டு கால
சிறைத்தண்டனையிலும் அதிகமான தண்டனையை விதிக்க வேண்டும் என்று
வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர்.
இரகசியமாக
இலாபமீட்டி பல மில்லியன் டொலர்களை மோசடி செய்த விவகாரத்தில் கடந்த
வியாழனன்று சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ராஜ் ராஜரட்ணம் மற்றும் அவரது
பங்காளிகள் தொடர்பான செய்தியானது முதலீட்டாளர்களை அதிர்ச்சி கொள்ள
வைத்துள்ளது.
சிறிலங்காவில்
பிறந்த இந்த வர்த்தகர் உள்ளகத் தகவல்களைப் பயன்படுத்தி 07 பில்லியன்
அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு குறைந்தது பத்தொன்பதரை ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அரச தரப்பு வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர்.
ஆனால்
இவ்வாறான அதிக கால தண்டனையை வழங்க மறுத்த நீதிபதி 'தற்போது 54 வயதையுடைய
ராஜரட்ணத்திற்கு நீரிழிவு நோய் காரணமாக அவரது சிறுநீரகம்
செயலற்றிருப்பதால் அவருக்கான தண்டனையை குறைப்பதாக' அறிவித்தார்.
ராஜரட்ணத்தின்
வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சான்றுகளை ஆதாரமாகக் கொண்டே
இவ்வாறு நீதிபதி இவருக்கான தண்டனைக் காலத்தைக் குறைத்துள்ளார்.
இம்மருத்துவ அறிக்கையில் இவருக்கான சிறுநீரக மாற்றுச்சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தீவிர
நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளே ராஜ் ராஜரட்ணம் என்ற இந்தக்
கைதிக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவருக்கு சிறையை விட்டு வெளியில்
செல்வதற்கான அட்டை வழங்கப்படமாட்டாது' எனவும் அமெரிக்க மாவட்ட நீதிமன்றின்
நீதிபதி றிச்சர்ட் கொல்வெல் தெரிவித்தார்.
பல
மில்லியன்களுக்குச் சொந்தக்காரரான ராஜரட்ணம் சிறிலங்கா, பாகிஸ்தான்,
அமெரிக்க போன்ற பல நாடுகளில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்கள் உட்பட
பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு தொண்டுகளையும் ஆற்றியுள்ளார் எனவும்
நீதிபதி குறிப்பிட்டார்.
நீதிமன்றில்
முன்னிறுத்தப்பட்டு தனது சட்டவாளர்களுடன் நின்றிருந்த ராஜரட்ணம் தனக்கான
தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு உணர்வுகளையும் வெளிப்படுத்தவில்லை.
இவர்
தொடர்பான தண்டனையை அறிவிப்பதற்கு முன்னர், ராஜரட்ணத்தை நோக்கி, ஏதாவது கூற
விரும்புகிறீர்களா என நீதிபதி கேட்டபோது 'கனம் நீதிபதி அவர்களே,
கூறுவதற்கு ஒன்றுமில்லை. நன்றி' எனத் தெரிவித்தார்.
வியாழனன்று
80 நிமிடங்களாக விசாரணை நடத்தப்பட்ட ராஜரட்ணத்தின் சட்டவாளர்கள் இவருக்கு
வழங்கப்பட்ட நீண்டகால சிறைத்தண்டனையானது மரணதண்டனைக்கு ஒப்பானது எனத்
தெரிவித்துள்ளனர்.
ராஜரட்ணம்
கேட்டுக் கொண்டதற்கிணங்க, வட கரோலினாவில் உள்ள புற்னெர் என்ற
சிறைச்சாலைக்கு இவரை அனுப்புமாறு நீதிபதி கட்டளையிட்டார்.
இச்சிறைச்சாலையில் மருத்துவமனை ஒன்றும் காணப்படுகின்றது.
ஒக்ரோபர்
2009 இல் இவர் தொடர்பான மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் ராஜரட்ணம்
குற்றவியல் வழக்கில் சிக்கிக் கொண்ட மிகப் பிரபலமான நபராக விளங்குகிறார்.
Goldman
Sachs Group Inc, Intel Corp, IBM kw;Wk; McKinsey & Co போன்ற
அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களுடன் இவர் நெருங்கிய
பங்களிப்பைக் கொண்டிருந்தார்.
1980
களில் அமெரிக்காவின் உள்ளக வர்த்தகச் செயற்பாடுகளில் மோசடியில் ஈடுபட்டு
கைதிகளாக இருந்த ஐவன் போஸ்;கி, மைக்கல் மில்க்கன் போன்றவர்களின் வரிசையில்
தற்போது ராஜரட்ணத்தை அரச வழக்கறிஞர்கள் இணைத்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட இருவரும் இரு ஆண்டு காலங்களே சிறைத்தண்டனை அனுபவித்தனர்.
ராஜரட்ணத்தின்
நடவடிக்கை 'வெட்கப்படக் கூடிய, அதிர்ச்சி தரவல்ல, பரவலாகப் பேசப்படுகின்ற'
விடயமாக உள்ளதாகவும், இவருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்குமாறும் கடந்த
வியாழனன்று நீதிமன்றில் வாதாடிய அமெரிக்காவின் பிரதி அரச வழக்கறிஞர் றீட்
பிறோட்ஸ்கி சுட்டிக்காட்டியிருந்தார்.
'ஜனநாயக
ஆட்சி நிலவும் எமது நாட்டில் நிலவும் திறந்த சந்தைப் பொருளாதார முறைமையில்
இவ்வாறான உள்ளக வர்த்தக ஊழலானது பாதிப்பை ஏற்படுத்தும் செயலாக உள்ளது' என
வழக்கறிஞரரான கோல்வெல் சுட்டிக்காட்டினார்.
நவம்பர் 28 அன்று ராஜரட்ணம் சரணடைய வேண்டும் என கட்டளையிடப்பட்டிருந்தது.
இவர்
தனது வர்த்தக ஆவணங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வரை
மன்ஹாற்றனில் உள்ள இவரது ஆடம்பரக் குடியிருப்பில் வீட்டுக் காவலில்
வைத்திருக்குமாறு ராஜரட்ணம் சார்பாக வாதாடிய சட்டவாளர்கள் கேட்ட போதும்
இந்த வேண்டுகோளை நீதிபதி நிராகரித்தார்.
இவரைக்
கைது செய்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதுவரையும் நீதிமன்றிற்கு
சமூகம் தராத ராஜரட்ணத்தின் மனைவியான அஷா, கடந்த வியாழனன்று தீர்ப்பை
நீதிபதி அறிவித்த போது நீதிமன்ற விருந்தினர் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தில் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார்.
ராஜரட்ணம்
தொடர்பாக மே மாதத்தில் பாதுகாப்பு, ஊழல் விவகாரம், சதி செய்தமை போன்ற 14
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவர் தனது இரு மாதகால விசாரணையில்
இது தொடர்பாக சாட்சியமளிக்கவில்லை.
ஆனால்
நீதி விசாரணையின் போது ராஜரட்ணத்தால் உரையாடப்பட்ட 45 பதிவு செய்யப்பட்ட
தொலைபேசி உரையாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.
10
மில்லியன் டொலர்களை இவர் தண்டப்பணமாகச் செலுத்தியதுடன், மேலும் Galleon
வழக்கிற்கான சட்டச் செலவு மற்றும் வர்த்தக செயற்பாடுகளில் ஏற்படும் இழப்பை
ஈடுசெய்யும் முகமாகவும் 53.8 மில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் எனவும்
நீதிபதி கட்டளையிட்டார்.
இவ்வழக்கானது அமெரிக்க நீதித் திணைக்களத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
வர்த்தகர்கள், சட்டவாளர்கள், செயற்படுத்துனர்கள், ஆலோசனை வழங்கியவர்கள் என இவ்வழக்கின் போது 26 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
இவர்களில்
25 பேர் சிறிய சிறிய குற்றங்களை மேற்கொண்டதுடன் ஒருவர் மட்டுமே மிகப்
பெரிய குற்றத்தில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1997
இல் ராஜரட்ணம், Galleon நிதி நிறுவனத்தை நிறுவியதுடன் அதனை உலகின் மிகப்
பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்திக் கொண்டமை இங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.
வழிமூலம் � Reuters
மொழியாக்கம் - நித்தியபாரதி
puthinappalakai.com
இலங்கை பங்குச்சந்தையில் ராஜ் ராஜரட்னத்தின் முதலீடுகள் விற்பனை?
News: Manithan
Saturday, October 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)





Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment