கொலன்னாவையில் பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவே முதலில் துமிந்த சில்வா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை தொகுதியில் எந்தவொரு அரசியல் பொறுப்புகளும் பாரதவிற்கு கொடுக்கப்படவில்லை. அது தொடர்பான பொறுப்புகள் கட்சியினால் துமிந்த சில்வாவிற்கே வழங்கப்பட்டிருந்தன. அதில் தலையிட்டமை தொடர்பாக பல தடவைகள் பாரதவை நான் கடுமையாக கடிந்து கொண்டுள்ளேன்.
அவர் எனக்கு தொழிற்சங்க இணைப்பாளராக செயற்படுவது தவிர எந்தவொரு கட்டத்திலும் சட்டத்தைக் கையில் எடுத்திருக்கக் கூடாது. துமிந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலும் அதனை தடுக்க பாரதவிற்கு அதிகாரம் கிடையாது.
அத்துடன் துமிந்தவை விரட்டிச் சென்று மோதலை ஏற்படுத்திக் கொண்டது பாரத தானே தவிர, துமிந்தவுக்கு இதில் பொறுப்பில்லை.
தவிரவும் அவர்கள் இருவர் இடையிலும் மோதலை தூண்டிவிட்டது இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் (திலங்க சுமதிபால) தான். அவர் மீது மிக விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் போது ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்
News : Lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment