Monday, October 17, 2011

கொழும்பை 3 மாதங்களில் கைப்பற்றுவோம் - மஹ்ரூப் சூளுரை

Best Blogger Tips
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் அதன் அதிகாரத்தை எதிர்வரும் மூன்று மாதங்களில் கைப்பற்றிக் காட்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஹமட் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 

ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற போதும் அதனால் பெரும்பான்மைப் பலத்தைப் பெறமுடியவில்லை என்பதுடன், வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு மாநகர சபையில் 27 க்கும் குறைவான ஆசனங்களைப் பெற்றுள்ளது. எனினும் இன்னும் மூன்று மாதங்களில் இச்சபையின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிக் காட்டுவோம் என சவால் விடுக்கின்றேன்.

ரணில் வீதிவீதியாகக், கடைகடையாக, வீடுவீடாகச் சென்று பிரசாரத்தை மேற்கொண்ட போதும், முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜியார் ஆகியோரை கொழும்பு மாநகர சபை அமைப்பாளராக நியமித்த போதிலும் பெரும்பான்மைப் பலத்தைப் பெற முடியவில்லை. இது ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடையே ஆதரவை இழந்து வருவதைக் காட்டுகின்றது. 

நான் மேயர் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியிலிருந்து விலகவில்லை. சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவராக நியமிக்கும் போராட்டத்தின் விளைவாகவே ஐ.தே. கட்சியிலிருந்து வெளியேறினேன். நான் வெறும் இரண்டு வாரங்கள் மாத்திரமே எனது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டேன். எனினும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். இது மக்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றது என தெரிவித்தார்.

News: Yarlmuslim

0 comments:

Post a Comment