கல்முனை மாநகர சபைக்கான மேயர் யாரென்பதனை தீர்மானிப்பதற்கு இரண்டு நாட்கள் தேவையில்லை. அதனை ஒரு சில மணித்தியாலங்களில் செய்திருக்க முடியும்.இரண்டு நாட்களாக காலத்தை கடத்தியதனால் ஒற்றுமையாக இருந்த சாய்ந்தமருது, கல்முனை ஊர்களை இரண்டாகப் பிரித்துள்ளார்கள். இதனை திட்டமிட்டதொரு சதியாகவே பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு கல்னை மாநகரசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 13948 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ள சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்னையில் அவரது இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கல்னை மாநகர சபையின் நடவடிக்கைகள் நீதியானதும் ஊழல் அற்றதுமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது செயற்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் மாநகர சபையின் நல்ல செயற்பாடுகளை இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் உரிமை கோரவும் விடமாட்டேன். மேயராக நியமிக்கப்படவுள்ள சிராஸ் மீராசாஹிவு நல்லபிள்ளை. அவர் தனது சொந்த மூளைக்கு இயங்க வேண்டும். அவ்வாறு செயற்படும் பட்சத்தில் நான் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன். இன் னொருவன் மூளைக்கு இயங்குவாராயின் அதனை அனுமதிக்க முடியாது. கல்னை மாநகர சபைக்கு மேயர் யாரென்று எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் வேண்டுமென்றே வதந்திகளைக் கிளப்பி சாய்ந்தமருது பிரதேசத்தில் டயர்களைப் போட்டு எரிக்கச் செய்துள்ளார்கள்.
அதேநேரம் சாய்ந்தமருது மக்களிடம் உண்மையை எடுத்துக் கூறி அவர்களை அமைதியடையச் செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் கட்சி எடுக்கவில்லை. ஒற்றுமையாக இருந்த இரண்டு ஊர்களைப் பித்துப் பார்ப்பதற்கு ஆசைப்பட்டுள்ளார்கள்.
இரண்டு ஊர்களும் இவர்களின் சதிகளுக்கு ஆளாகாமல் தொடர்ந்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்த விரும்புகின்றேன். டயர்களைப் போட்டு ஏன் எரித்தீர்களென்று சிராஸிடம் நான் கேட்டேன், அதற்கு அவர் ஏதோ பதிலொன்றைச் சொல்ல விளைந்த போது தலைவர் ரவூப் ஹக்கீம் அதனைப் பற்றி எதுவும் பேசாதீர்கள் என்று தடுத்தார்.
நான் கேட்டதற்கு சிராஸ் ஏதோ சொல்ல விளையும்போது தலைமைத்துவம் தடுக்கின்றதால் டயர்களை எரிக்கச் சொன்னது யாரென்ற சந்தேகம் எழுகின்றது. டயர்களைப் போட்டு எரிப்பதில் பெயர் பெற்ற ஒருவர் இங்கு இருக்கின்றார்.
நான் சிராஸுடன் தனியாக பேச வேண்டு மென்று கூறினேன். ஏற்பாடு செய்து தருகின்றோம் என்றார்கள். மறுநாள் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணிவரை தலைவரின் வீட்டில் காத்திருந்தேன். அவர் வரவில்லை. ஈற்றில் நாம் விசாரித்த போது சிராஸிற்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்று தெரிய வந்தது. ஏன் இப்படி செயற்பட்டார்களென்றால் எல்லாமே திட்டமிட்ட சதியின் அடிப்படையில் தான்.
தேர்தல் காலத்தில் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் செயற்பட்ட விதம் குறித்து சகோதரர் சத்தார் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கத்தக்கதாக கூறினார். அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எதனையும் தெரிவிக்கவில்லை.
கட்சியின் தவிசாளர் சாய்ந்தமருதில் தெரிவித்த வாப்பா, சாச்சா கதை பேசப்பட்ட போது தவிசாளர் இன்றைக்கும் கூறுவேன் நாளைக்கும் கூறுவேன் என்று மிகத் தைரியமாகக் கூறினார். இதனைக் கேட்ட தலைவர் எதனையும் பேசாது இருந்தார். இதனை என்னவென்று அழைப்பது? வெட்கம் கெட்டதனம் என்பதா? அல்லது அவர் பிறந்த மண் வாசனையின் தன்மை என்பதா?
எது எப்படியாக இருந்தாலும் நன்கு திட்ட மிட்டு ஒரு குழுவாகச் செயற்பட்டுள்ளார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. உங்களுக்குச் சேவை செய்ய என்னை அர்ப்பணிக்க முன் வந்துள்ளேன். மாநகர சபையை நீதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு வேண்டிய சகல ஒத்தாசைகளையும் வழங்குவேன் என்றார்.

Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment