Wednesday, October 12, 2011

ஈரானில் முஸ்லிம் நடிகைக்கு 90 கசையடி

Best Blogger Tips
இஸ்லாமியச்சட்டங்கள் பெண்களின் கட்டுப்பாட்டை மிகவும் வலியுறுத்தும் சட்டங்களாகும் இதனை மீறும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டனைகளும் இருக்கும் என்பதற்கு உதாணமாக ஒருசம்பவம் ஈரானில் நடந்துள்ளது. 
இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஆபாசமாக நடித்ததாக கூறி ஈரான் நடிகை மர்ஜியா வபாமெஹருக்கு 90 கசையடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கபப்ட்டுள்ளது என்று அந்நாட்டு இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ‘மை டெஹ்ரான் பார் சேல்’ என்ற படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக நடிகை மர்ஜியா வபாஹெர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

இந்த படம் ஆஸ்திரேலியாவுடன் கூட்டாக சேர்ந்து எடுக்கப்பட்டது. டெஹ்ரானில் உள்ள ஒரு நாடக நடிகையை அதிகாரிகள் நடிக்கவிடாமல் தடை செய்கிறார்கள். இதையடுத்து அந்த நடிகை தலைமறைவாக வாழ்கிறார். பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவரின் உதவியோடு ஈரானை விட்டு வெளியேறுகிறார் என்பது தான் கதை.

இதில் மர்ஜியா இஸ்லாமிய சட்டத்தை மீறி ஆபாசமாக நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை மாத இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு 90 சவுக்கடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

‘மை டெஹ்ரான் பார் சேல்’ படத்தை ஈரானில் திரையிட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் சட்டவிரோதமாக அந்த படம் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று பார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.பிபிசியுடன் சேர்ந்து பணியாற்றியதற்காக ஈரானில் கடந்த மாதம் மட்டும் 6 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
News: Yarlmuslim

0 comments:

Post a Comment