Wednesday, October 12, 2011

கொலன்னாவ மக்களை தனிமைப்படுத்தப் போவதில்லை : பாரதவின் புதல்வி

Best Blogger Tips
கொலன்னாவ மக்களை தனிமைப்படுத்தப் போவதில்லை என கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் அரசியலில் பிரவேசிக்கும் உத்தேசம் இருப்பதாக ஹிருனிகா குறிப்பிட்டுள்ளார்.
தந்தைக்கு பெருமளவில் மக்கள் ஆதரவு காணப்பட்டது, அனைவர் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்பதே தந்தையின் கொள்கையாக அமைந்திருந்தது.
தந்தை அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அனர்த்தங்களையும், அழுத்தங்களையும் எதிர்நோக்கினார்.
மட்டக்களப்பு போன்ற தூர பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தந்தையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்துள்ளனர்.
எனினும் தாக்குதலை நடத்திய மற்றைய அரசியல்வாதி உயிருக்கு போராடி வருகின்ற போதும் மக்கள் அவரைச் சென்று பார்வையிடவில்லை என பாரதவின் புதல்வி கண்ணீருடன் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்ட போதிலும் தந்தை சொத்துக்களையும் பணத்தையும் சம்பாதிக்கவில்லை மாறாக மக்களை சம்பாதித்துள்ளார் என அவர் கண்ணீர்மல்க தெரிவித்தார்
News : Lankasri

0 comments:

Post a Comment