Friday, October 14, 2011

தனக்கு வழங்கப்பட்டதை விடவும் அதிக பாதுகாப்பு துமிந்த'விற்கு வழங்கப்பட்டுள்ளது!- சரத் பொன்சேகா [ வெள்ளிக்கிழமை,

Best Blogger Tips
இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு வழங்கப்படாத பாதுகாப்பு துமிந்த சில்வாவிற்கு கிடைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தருணத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விடவும் முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவைச் சுட்டுக் கொன்ற நபருக்கு தற்போது அரசாங்கம் கூடுதலான பாதுகாப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

News : Lankasri

0 comments:

Post a Comment