Tuesday, October 11, 2011

மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது

Best Blogger Tips
மஹிந்த ராஜபக்சவிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் எதிராக கட்சிக்குள் எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுடன் இணைந்து தமக்கெதிராக சூழ்ச்சித் திட்டமொன்றை வகுப்பதாக ஜனாதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவு மஹிந்தவை எச்சரித்துள்ளது.

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மரணத்தைப் பயன்படுத்தி கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவ்விருவரும் ஆதரவாளர்களையும், கட்சி செயற்பாட்டாளர்களையும் தூண்டிவிடுவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பாரத லக்ஸ்மன் கொல்லப்பட்டமைக்கு ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் பொறுப்புகூற வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சரான பீலிக்ஸ் பெரேரா பகிரங்காக தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட மஹிந்தவின் ஆலோசகர் பாரத லக்ஸ்மனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மலர்ச்சாலைக்குச் செல்லவிருந்த போதிலும் பாதுகாப்புத் தரப்பினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் மலர்ச்சாலைக்குச் சென்ற ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவிற்கு, ஆத்திரமடைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்தே ஜனாதிபதியை மலர்ச்சாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வாஹி கால்லகே உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி அந்த இடத்திற்குச் செல்லும் சந்தர்ப்பத்தில் கூச்சல் குழப்பம் செய்வதற்கு பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் தயாராக இருந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே மலர்ச்சாலைக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாரத லக்ஸ்மனின் வீட்டிற்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்று முற்பகல் 9.30 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பிற்கு வந்த ஜனாதிபதி, வந்திறங்கியவுடன் மலர்ச்சாலைக்கு செல்வதாகவும் இதனால் அமைச்சர்கள் சிலரை அருகிலுள்ள ஏ.எச்.எம். பௌசியின் இல்லத்திற்கு வந்தீருக்குமாறும் கூறியுள்ளார்.
இதன்படி 10 மணியளவில் சுசில் பிரேம்ஜயந்த, பசில் ராஜபக்ஷ உட்பட இன்னும் சிலர் அமைச்சர் பௌசியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து ஜனாதிபதி மலர்ச்சாலைக்குச் செல்லும் பயணத்தை இரத்துச் செய்தமையினால் அந்த அமைச்சர்கள் பாரத லக்ஸ்மனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி நேற்று முற்பகல் 11.30 அளவில் பாரத லக்ஸ்மனின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி அங்கு அவருக்கு உரிய மரியாதைக் கிடைக்கிவில்லையென்ற ஆத்திரத்தில் அங்கிருந்து 5 நிமிடங்களில் வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து, பாரத லக்ஸ்மனின் கொலை தொடர்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவுடன் சுமார் 45 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளார்
 News: Lankasri

0 comments:

Post a Comment