Monday, October 17, 2011

டுனீஷியாவில் மற்றுமொரு சிக்கல் உருவாகிறது..!

Best Blogger Tips
அரபு புரட்சிக்கு வித்திட்ட டுனீஷியாவில் பொதுத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள சூழலில், புதிய சர்ச்சை ஒன்று புறப்பட்டுள்ளது. அந்நாட்டு "டிவி' ஒன்றில் கடவுளை உருவம் உடையவராக சித்தரித்ததற்கு, ஆதரவும் எதிர்ப்பும் உருவாகியுள்ளது. டுனீஷிய அதிபராக இருந்த ஜைன் அல் அபிதின் பென் அலி, நாட்டை விட்டு ஓடிப் போன பின், முதன் முறையாக இம்மாதம் 23ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ளது.


இந்நிலையில், அந்நாட்டின் "நெஸ்மா டிவி' யில் சமீபத்தில் "பெரஸ்போலிஸ்' என்ற கார்ட்டூன் படம் ஒளிபரப்பானது. இதில் கடவுள் உருவம் உடையவராக சித்தரிக்கப்பட்டிருந்தார். இதை எதிர்த்தும், இதுபோன்ற காட்சிகளை தணிக்கை செய்ய வேண்டும் எனவும் கோரி இஸ்லாமிய பழமை வாதிகள், கடந்த வாரம் தலைநகர் டுனீசில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைதியாகத் துவங்கிய ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறத் துவங்கியவுடன், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிக் கூட்டத்தைக் கலைத்தனர். அதேநேரம், நாட்டின் இஸ்லாமியர்களில் முற்போக்குவாதிகள் பலர், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நேற்று முன்தினம் மற்றொரு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.


இதில் கலந்து கொண்ட தாரிக் மர்சூகி, 38 என்பவர் கூறுகையில்,"இன்று இவர்கள் கூறும் தணிக்கையை சரி என ஒப்புக் கொண்டால், நாளைக்கு கல்வி போன்றவற்றிலும் கை வைத்து விடுவர். கருத்துக்களை வெளியிட சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்' என்றார்

0 comments:

Post a Comment