விண்வெளியில் செயலிழந்த ஜெர்மனியின் ஆய்வுச் செய்மதியின் உடைந்த பாகங்கள் தென்கிழக்காசியாவில் விழுந்திருக்கலாம் என்று ஜேர்மனிய விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறிய பேருந்து ஒன்றின் அளவுடைய - 1.87 தொன் எடையான இந்த செய்மதி செயலிழந்து, 30 துண்டுகளாக உடைந்து 450 கி.மீ வேகத்தில் பூமியில் விழுந்துள்ளது.
1990ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த செய்மதி 1999ம் ஆண்டில் செயலிழந்த நிலையில் புவிச்சுற்று வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. இந்த செய்மதி சனிக்கிழமை இரவு 9.45 மணிக்கும், 10.15 மணிக்கும் இடையில் புவியை நெருங்கியதாகவும், அது தரையில் விழுவதற்கு 10 தொடக்கம் 15 நிமிடங்களே எடுத்திருக்கும் என்றும் ஜேர்மனி விண்வெளி ஆய்வு நிலையம் கூறியுள்ளது.
அதேவேளை அமெரிக்க இராணுவ விஞ்ஞானிகள் இந்த செய்மதிப் பாகங்கள் இலங்கைன் கிழக்குப் பகுதியில் விழலாம் என்று எதிர்பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே ஜேர்மனிய செய்மதி தென்கிழக்காசியாவில் வீழ்ந்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். எனினும் இவை எங்கு விழுந்தன என்பதை அவர் உறுதி செய்யவில்லை. இந்த செய்மதிப் பாகங்கள் கிழக்குப் பகுதியில் வீழ்ந்தனவா என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை. இந்த செய்மதிப் பாகங்கள் பூமியில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு 2000இல் ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் முன்னரே கூறியிருந்தனர்.
ஆனாலும், இந்த செய்மதி பாகங்களால் இலங்கைக்கு ஆபத்து உள்ளதாக முன்னரே கணித்திருந்த அமெரிக்க, ஜேர்மானிய விஞ்ஞானிகள் இது குறித்த முன்னெச்சரிக்கைகள் எதையும் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment