சவூதி அரேபியாவின் மத விவகார, இஸ்லாமிய விவகார, கலாசார அலுவல்கள் பதில் அமைச்சர் டாக்டர் அம்மாரை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது சந்திந்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது எதிர்காலத்தில் இலங்கையின் ஹஜ்ஜாஜிகளினுடைய எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், பள்ளிவாசல், ஏனைய நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாகவும், மத விவகார நடவடிக்கைகளுக்கு அதிக பங்களிப்புகளை வழங்குமாறும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பதில் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அமைச்சர் இணக்கம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக விஷேட குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது சவூதி அரேபியாவுக்கான இலங்கை நாட்டு தூதுவர் அஹ்மத் ஜவாத்தும் கலந்துகொண்டார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment