Thursday, November 3, 2011

முடிந்தால் உதவுங்கள்

Best Blogger Tips
20 வருடங்களுக்கு முன்னர் தனது வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவ ரைத் தேடி சவூதி அரேபியாவின் தாயிப் நகரைச் சேர்ந்த செல் வந்தர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தனது முன்னாள் பணிப் பெண்ணுக்கு பெறுமதியான பல பரிசுப் பொருட்களை எடுத்து வந்துள்ள அவர் கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் தங்கியுள்ளார்.

1989 முதல் 1992 ஆம் ஆண்டு வரை கொழும்பு வீதி, கண்டியைச் சேர்ந்த ஹாஜா இஸ்மாயில் (ஸரீனா இஸ்மாயில்) எனும் இலங்கைப் பெண் தனது வீட்டில் பணி புரிந்ததாக கூறும் சவூதியிலுள்ள தாயிபைச் சேர்ந்த பாசிம் அப்துல்லா முஹ்சீன் என்பவர் தனது வீடு சவூதி விமானப் படை வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

ஹாஜா இஸ்மாயிலை மீண்டும் சந்திக்கும் ஆவலுடன் தான் இலங்கைக்கு வந்ததாகவும் அவருக்கு தன்னால் வழங்க முடியாது போன சம்பளப் பணம் மற்றும் பரிசில்களை எடுத்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறித்த பெண்ணின் மகளின் பெயர் சாமிளா எனவும் அவரின் சகோதரியான பரீனா குவைத்தில் தொழில் புரிந்ததாகவும் ஞாபகம் வைத்து கூறும் இவர் தன்னை எப்படியாவது சந்திக்குமாறு வினயமாக கோரியுள்ளார்.  இவர் இரு வாரங்கள் இலங்கையில் தங்கியிருப்பார்.

0 comments:

Post a Comment