இலங்கையில் முதலாவதாக நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 27ஆம் திகதி அதிமேதமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கொழும்பு கொட்டாவையிலிருந்த காலி வரை நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பாதை 27ஆம் திகதி மு.ப. 11.03 எனும் சுபநேரத்தில் திறந்து வைக்கப்படும்.
இந்நிகழ்வின்போது வீதியின் பல இடங்களி்ல் பல களியாட்ட நிகழ்வுகளும் இசை நிகழச்சிகளும் அன்றை தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, அவ்வீதி வழியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய
அபிவிருத்தி வங்கியும், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பானிய வங்கியும் இந்த
நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்திற்கான பிரதான நிதியுதவிகளை வழங்கியுள்ளன.
கொட்டாவையிலிருந்து குருந்துகஹதெக்ம வரையிலான 65 கிலோமீற்றர் தூரத்திற்கு
சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பானிய வங்கியும், குருந்துகஹதெக்மவிலிருந்து
மாத்தறை, கொடகம வரையிலான 64.8 கிலோமீற்றர் தூரத்திற்கு ஆசிய அபிவிருத்தி
வங்கியும் நிதியுதவிகளை வழங்கியுள்ளன.





Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment