Thursday, November 3, 2011

பலஸ்தீன் யுனஸ்கோ உறுப்புரிமை தொடர்பாக இலங்கை

Best Blogger Tips
பலஸ்தீனுக்கு யுனஸ்கோ உறுப்புரிமை வழங்கப் பட்டமைக்கு இலங்கை தமது முழு ஆதரவினையும் தெரிவிப்பதாக தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான இலங்கையின் நிலைப்பாடு தொடர்பான அறிக்கையை, பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் அமைந்துள்ள யுனஸ்கோ தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் 36 வது யுனஸ்கோ கூட்டத்தொடரில் சமர்பித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு நியாயமானதும் நீண்டகாலமானதுமான தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் டாக்டர் ஜெகத் பாலசூரிய இதன்போது தெரிவித்துள்ளார்.
News: Lankamuslim

0 comments:

Post a Comment